உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நிலமோசடி புகாரில் கைதான கல்வி அதிகாரி "சஸ்பெண்ட் தனிப்பிரிவு போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்

நிலமோசடி புகாரில் கைதான கல்வி அதிகாரி "சஸ்பெண்ட் தனிப்பிரிவு போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்

ஓசூர்: ஓசூர் அருகே நில மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, உதவி தொடக்க கல்வி அலுவலர் வெங்கடேஷன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். நில மோசடி குறித்து தனிப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சூளகிரி அடுத்த சோமநாதபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சையத் காசிம் சாகிப். இவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ளது. இந்த நிலத்தை பர்கூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் வெங்கடேசன் (42), கிருஷ்ணகிரி ரியல் எஸ்டேட் அதிபர் முருகன் உதவியுடன், தன் மனைவி சித்ரா பெயரில் எழுதி வாங்கினார். இது குறித்து சையத் காசிம் சாகிப் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். ஆத்திரமடைந்த வெங்கடேஷன், முருகன் ஆகியோர் ரவுடிகள் துணையுடன் சையத் காசிம் சாகிப்பை தாக்க முயன்றனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வெங்கடேஷன், முருகன் உள்ளிட்ட 22 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தனிப்பிரிவு போலீஸார் வெங்கடேசன் நிலமோசடி பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்தினர். வெங்கடேசன் ஆரம்ப காலத்தில் சூளகிரி பகுதியில் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது, ஆசிரியர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, பல லட்சம் ரூபாய், 'சீட்டு' நடத்துவது உள்ளிட்ட பகுதி நேர வேலை செய்து வந்தார். கிருஷ்ணகிரி நர்சரி உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று மத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலைபார்த்தார். அதன்பின் ஓசூர் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்தார். ஓசூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வரவேற்பு இருந்ததால், வெங்கடேசன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுப்பட துவங்கினார். இதில் நல்ல வருமானம் கிடைத்ததால், உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியை பகுதி நேரமாக வைத்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலை முழுநேர தொழிலாக செய்து வந்தார். பள்ளிகளுக்கு ஆய்வு செல்வதாக கூறிவிட்டு புரோக்கர்கள் உதவியுடன் தொழில் அதிபர்கள், அரசியல் புள்ளிகளுக்கு 'சைட்' காட்டி நிலம் வாங்கி கொடுக்கும் பணியில் ஈடுப்பட்டார். இதனால், வெங்கடேசன் குறுகிய காலத்தில் ஓசூர், சூளகிரி உள்ளிட்ட பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பினாமி பெயர்களில் பல கோடி ரூபாய்களுக்கு சொத்துக்கள் வாங்கி குவித்தார். இது குறித்து புகார் சென்றதால் வெங்கடேஷன் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். அதன்பின் கிருஷ்ணகிரி முக்கிய தி.மு.க., புள்ளியை பிடித்து பர்கூர் உதவி தொடக்க கல்வி அலுவலராக வந்தார்.பர்கூரில் பணிபுரிந்து கொண்டு, ஓசூர், சூளகிரி பகுதியில் ரியல் எஸ்டேட் புள்ளிகள், அரசியல் புள்ளிகள் உதவியுடன் மீண்டும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறக்க துவங்கினார். பாதிக்கப்பட்ட விவசாயி சையத் காசிம் சாகிப் புகரால் வெங்கடேசனை போலீஸார் கைது செய்தனர். வெங்கடேசனை மாவட்ட கல்வி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. போலீஸார் மாயமான அவரது மனைவியை தேடி வருவதோடு, வெங்கடேசன் குடும்ப சொத்துகள், பினாமிகள் பெயரில் அவர் வாங்கி குவித்துள்ள சொத்து பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.கஞ்சா பயிரிட்ட விவசாயி கைதுஅரூர்: அரூர் அருகே மரவள்ளி கிழங்கு செடியுடன் கஞ்சா பயிர் செய்திருந்த விவசாயியை போலீஸார் கைது செய்தனர். அரூர் அடுத்த கீழானூர் பகுதியில் விவசாயி தோட்டத்தில் கஞ்சா செடி பயிர் செய்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அரூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீஸார் கீழானூர் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விவசாயி காளி (60) என்பவர் தோட்டத்தில் சோதனை செய்த போது, அவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிர் செய்திருந்த குச்சி கிழங்கு செடிகளுக்கு இடையில் எட்டு கஞ்சா செடிகள் பயிர் செய்திருப்பது தெரிந்து, செடிகளை போலீஸார் அழித்தனர். காளியை போலீஸார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை