உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விநாயகர் சதுர்த்தி விழா விளையாட்டு போட்டிகள்

விநாயகர் சதுர்த்தி விழா விளையாட்டு போட்டிகள்

ஓசூர்: ஓசூர் பாகலூர் ஹட்கோவில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விøளையாட்டுப் போட்டிகள் நடந்தது.ஓசூர் பாகலூர் ஹட்கோ வீட்டு வசதிவாரியம் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் விநாயகர் சதூர்த்தி விழா செப்டம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி குழந்தைகள், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளை கவுன்சிலர் ரமேஷ் துவக்கி வைத்தார். ஏராளமானோர் ஆர்வமாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வீட்டுவசதிவாரிய குடியிருப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ