கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் தனசேகரன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமலைசெல்வம் வரவேற்றார். போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
கவிதை போட்டியில் மதகொண்டப்பள்ளி நமதுமாதா மேல்நிலைப்பள்ளி மாணவி சாரதி முதல் இடத்தையும், இதே பள்ளி மாணவி ஸ்ரீதேவி இரண்டாம் இடத்தையும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தமிழ்செல்வி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். கட்டுரை போட்டியில் தேன்கனிக்கோட்டை ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவி மங்களா முதல் இடத்தையும், பாகலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பரிதா இரண்டாம் இடத்தையும், தேன்கனிக்கோட்டை ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவி லட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
பேச்சு போட்டியில் மதகொண்டப்பள்ளி நமது மாதா மேல்நிலைப்பள்ளி மாணவன் சசிகுமார் முதல் இடத்தையும், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி நபீனாபேகம் இரண்டாம் இடத்தையும், மதகொண்டப்பள்ளி நமது மாதா மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் பரிசு வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வெங்கடப்பன், சின்ன பில்லப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், பொதுக்குழு உறுப்பினர் பழனி, சாய்குமார், கடலரசு மூர்த்தி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.