| ADDED : செப் 11, 2011 01:00 AM
ஓசூர்: ஓசூர் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன் பதவிகளில், தி.மு.க.,
மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.ஓசூர் நகர
மற்றும் ஒன்றிய தி.மு.க., வில் நகராட்சி, யூனியன் கவுன்சிலர்கள், மாவட்ட
கவுன்சிலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக
நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் ஓசூர் ஆந்திர
சமீதியில் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., செங்கை சிவம், தலைமை வகித்து
நிர்வாகிகளிடம் விருப்ப மனு வழங்கினர். மாவட்ட துணை செயலாளர் நாகராஜ்
முன்னிலை வகித்தார். ஏராளமான நிர்வாகிகள் ஆர்வமாக பல்வேறு பதவிகளுக்கு
விருப்ப மனு வழங்கினர்.நகர செயலாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு
உறுப்பினர் சுகுமாரன், தளி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகராட்சி
தலைவர் குருசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மஞ்சுநாதன், பஞ்சாயத்து
தலைவர் ராமாஞ்சிரெட்டி, ராஜன்னா, அரசனடட்டி ரவி உள்பட நிர்வாகிகள் பலர்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.* ஓசூர் பாரதிய ஜனதா கட்சி
அலுவலகத்திலும் நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கினர்.