உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

அலட்சியமாக பைக்ஓட்டிய 2 பேருக்கு 'காப்பு'ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மணி மற்றும் எஸ்.ஐ., பயாஸ் ஆகியோர், ஓசூர் வாக்கீல் லே அவுட் மற்றும் மத்தம் சாலை சந்திப்பு பகுதியில், தனித்தனியாக வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக அலட்சியமாகவும், அதிவேகமாகவும் பைக்குகளை ஓட்டிச்சென்ற, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த செங்கனுார் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 38, சூளகிரி அருகே கும்பளம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 28, ஆகிய இருவரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.பொது வினியோக திட்டகுறை தீர்க்கும் கூட்டம்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்திலுள்ள குறைகளை களைவதற்கு, மாதந்தோறும், 2வது சனிக்கிழமை, அந்தந்த தாலுகாவில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடப்பது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி அடுத்த செம்படமுத்துார் கிராமத்தில், நேற்று முன்தினம் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்.ஐ., சதீஷ் முன்னிலை வகித்தார். ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகளை நிவர்த்தி செய்தனர்.லாரி மோதி மூதாட்டி சாவுஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹெப்பால் அருகே குட்டஹள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 43. சாப்ட்வேர் இன்ஜினீயர்; இவரது தாய் விஜயம்மா, 61; இருவரும், பெங்களூருவில் இருந்து திருநள்ளாரு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு மாருதி காரில் சென்றனர். உறவினரான முனியப்பா, 64, என்பவர் உடன் சென்றார். ஸ்ரீநாத் காரை ஓட்டினார். பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் இரவு, 11:30 மணிக்கு கார் சென்றபோது, ஒரு லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரியின் பின்னால் மோதியது.அதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஸ்ரீநாத் ஓட்டி சென்ற காரின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீநாத்தின் தாய் விஜயம்மா, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஸ்ரீநாத், முனியப்பா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்