உள்ளூர் செய்திகள்

லாரியில் திடீர் தீ

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டறையில் நிறுத்தியிருந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருக்கு சொந்தமான லாரியில் இன்ஜின் பழுதை சரி செய்ய சென்னை சாலையில் உள்ள லாரி பட்டறையில் நிறுத்திருந்தார். நேற்று காலை, லாரி இன்ஜினிலிருந்து திடீர் தீ ஏற்பட்டு லாரி எரிந்தது.இது குறித்து அப்பகுதியினர் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு அலுவலர் வேலு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். பெட்டோல் பங்க் அருகே தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை