உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவர்களுக்குஇலவச சீருடை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்குஇலவச சீருடை வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த இம்மிடிநாயனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் மணி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ஞானசுந்திரி முன்னிலை வகித்தார். விழாவில் கடந்த ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், பள்ளி தலைமையாசிரியர் மணி தனது தந்தை துரைசாமி நினைவாக பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். இதனை பள்ளி பி.டி.ஏ., தலைவர் சந்திரப்பா, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராமச்சந்திரன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்.விழாவில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வாசுதேவன், நவமணி மற்றும் ஆசிரியர்கள் , மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை