உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூரைச் சேர்ந்தவர் மாரியப்பன்,55; தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மத்தூர் அடுத்த, பெரமகவுண்டனூர் பகுதியில் தேங்காய் லோடு ஏற்றுவதற்காக வேனில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். அவருடன் சென்ற சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை