மேலும் செய்திகள்
கனிமங்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
11-Oct-2025
தேசிய அஞ்சல் வார சிறப்பு முகாம்கள்
08-Oct-2025
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஒன்றரை யூனிட் ஜல்லி கற்களை, அஞ்செட்டியிலிருந்து, கேரட்டிக்கு கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அஞ்செட்டி போலீசில் ஒப்படைத்தனர். தாசில்தார் செந்தில்குமார் புகார் படி, லாரி டிரைவரான கேரட்டியை சேர்ந்த டிரைவர் குழந்தை மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Oct-2025
08-Oct-2025