உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவிலை தரைமட்டமாக்கிய லாரி டிரைவர்; பக்தர்கள் அதிர்ச்சி

கோவிலை தரைமட்டமாக்கிய லாரி டிரைவர்; பக்தர்கள் அதிர்ச்சி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பாகலுார் செல்லும் சாலையில், உளியாளம் பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் ஆஞ்சநேயர் கோவில் இருந்தது. இக்கோவிலில் அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை ஓசூரில் சரக்குகளை இறக்கி விட்டு, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற லாரி, டிரைவர் சுதாகரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆஞ்சநேயர் கோவில் மீது மோதியது. இதில் கோவில் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அப்பகுதி மக்கள் கோவில் அருகில் தான் பஸ்சிற்காக காத்திருப்பர்.விபத்து நடந்த நேரத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கோவில் தரைமட்டமானதால், அப்பகுதி மக்கள், பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து, டிரைவர் சுதாகரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை