உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அசாம் மாநிலத்தை சேர்ந்த காதல் தம்பதி தற்கொலை

அசாம் மாநிலத்தை சேர்ந்த காதல் தம்பதி தற்கொலை

பாகலுார்: பாகலுாரில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காதல் தம்பதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் அபித், 23, ஆஸ்மின் அக்தர் லஷ்கர், 21. இருவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கிரு ஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே சிச்சிறுகானப்பள்ளியில் தனியார் பேட்டரி நிறுவனத்தில் அப்துல் அபித் பணியாற்றி வந்தார். த ம்பதி அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று மதியம் 2:00 மணி வரை வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அங்கு, ஆஸ்மின் அக்தர் லஷ்கர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பாகலுார் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் அப்துல் அபித் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். ுகுழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு காரணமா என, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி