மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
15-Dec-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று, 600க்கும் குறைவான ஆடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காலை, 9:00 மணிக்கு மேல் ஆடுகளை வாங்க மக்கள் குவிந்த நிலையில், ஆடுகள் விற்பனை ஜரூராக நடந்தது. இதனால், 12 கிலோ எடை உள்ள ஆடு 9,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரையும், 15 கிலோ எடை உள்ள ஆடு, 10,000 ரூபாய் முதல், 13,000 ரூபாய் வரையும் விற்பனையானது. ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால், பலர் ஆடு கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். அதன்படி நேற்று, சந்தையில், 10:00 மணிக்கு மேல், வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
15-Dec-2025