மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் துவக்கம்
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், உலக நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் பெறவும், 30ம் ஆண்டு மகா நவசண்டியாகம் நேற்று துவங்கியது.காலை, 10:15 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு தேர்ப்பேட்டை பச்சைகுளத்தில் இருந்து நீர்க்குடம் புறப்படுதல், இரவு, 7:00 மணிக்கு கலசஸ்தாபனம், கலசபூஜை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.ஓசூர் முன்னாள் காங்., எம்.எல்.ஏ., மனோகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், ஜெயதேவ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் இன்று (ஆக., 2) காலை, 8:30 மணிக்கு கலசபூஜை, ருத்ர ஹோமம் நடக்கிறது.