மேலும் செய்திகள்
குடும்பத்துடன் பூசாரி தற்கொலை முயற்சி
03-Oct-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கல்லுாரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 36, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தன் நண்பர் விமல் என்பவருடன், பைக்கில் பெரிய பொம்பட்டியை நோக்கி சென்றார். ஊணாம்பாளையம் பிரிவு சாலையில், அதே பகுதியை சேர்ந்த சரவணன், 62, மற்றும் வரதராஜ், 40, ஆகிய இருவரும் டி.வி.எஸ்., பைக்கை, சாலையின் குறுக்கே நிறுத்தி, முத்துப்பாண்டியை தகாத வார்த்தையால் திட்டி, அவரை, சரவணன் கத்தியால் வெட்டி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முத்துப்பாண்டி புகார் படி ஊத்தங்கரை எஸ்.ஐ., மோகன் வழக்குப்பதிந்து, முதியவர் சரவணனை கைது செய்து விசாரிக்கிறார்.
03-Oct-2025