உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நிபந்தனை ஜாமினில் வந்தவர் கைது

நிபந்தனை ஜாமினில் வந்தவர் கைது

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மயிலம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 46, கொத்தனார். இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, தகராறில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து, போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர். கடந்த, 9ல், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திடும் வகையில், சரவணன் நிபந்தனை ஜாமின் பெற்றார்.இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில், போச்சம்பள்ளி நீதிமன்றத்திற்கு வந்த அவர், அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தும், ஆபாசமாக பேசியபடியும் நின்றார். நீதிமன்ற தலைமை எழுத்தர் சத்யபிரியா அளித்த புகார்படி, போச்சம்பள்ளி போலீசார் சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை