மேலும் செய்திகள்
ரூ-.35 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
30-Jun-2025
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, கோணனுாரை சேர்ந்தவர் அரவிந்தன், 28. இவர் மனைவி கிருத்திகா, 23. இவர், தன், 2வது குழந்தை பிரசவத்திற்கு தர்மபுரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.குழந்தை பிறந்து, 6 மாதமான நிலையில் தாய் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில், அரவிந்தனின் நண்பரான கொடமாண்டப்பட்டியை சேர்ந்த சரண், 25, என்பவர், நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்த கிருத்திகாவிடம் சென்று, குழந்தை நன்றாக உள்ளதா என விசாரித்து விட்டு, அவரை தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த கிருத்திகா, கணவர் அரவிந்தனிடம், இது குறித்து கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த அரவிந்தன், நேற்று மதியம், 2:00 மணிக்கு, போச்சம்பள்ளி வாரச்சந்தை வளாகத்திற்கு, சரணை மொபைல் போன் மூலம் அழைத்துள்ளார். அங்கு வந்த சரணை அரிவாளால் வெட்ட முயன்றபோது, அதை இடது கையால் தடுத்த சரணுக்கு, முழங்கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வலது கையில் சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது.சுதாரித்த சரண் அங்கிருந்து தப்பியோடி ரத்தம் சொட்ட, சொட்ட போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றார். போலீசார் அவரை மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, அரவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
30-Jun-2025