காசி விசுவநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம், 4வது தெருவில் அமைந்துள்ள விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த ஜூன் 1ல் நடந்தது. தினமும் காசி விசுவநாதருக்கு அபி ேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்து வந்த நிலையில் நேற்று, 48வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, செந்தமிழ் ஆகம பண்டிதர் சித்தாந்த புரவலர் கயிலை முருகு இளவேலனின் செந்தமிழில் திருமுறை வேள்வி நடந்தது. தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து பம்பை, கயிலாய வாத்தியம் முழங்க, அம்மையப்பர் உடன் பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று சுவாமிக்கு பால் அபி ேஷகம் செய்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் குத்து விளக்கு பூஜை நடந்தது.