உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இடுபொருட்கள் வழங்கும் விழா

இடுபொருட்கள் வழங்கும் விழா

ஓசூர்: கெலமங்கலம், வட்டார தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை சார்பில், தேன்கனிக்கோட்டை துணை வேளாண் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. கெலமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணன், வேளாண் உதவி இயக்குனர் ஜான்லுார்து சேவியர் முன்னிலை வகித்தனர். தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு நிலப்போர்வை, மண் புழு வளர்ப்பு உர தயாரிப்பு படுக்கை, துவரை நாற்றுகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கினார்.துவரை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 50 சதவீத மானியத்தில், துவரை விதைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். துணை தோட்டக்கலைத்துறை அலுவலர் குமார், வேளாண் அலுவலர் பிரியா, துணை வேளாண் அலுவலர் வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ