மேலும் செய்திகள்
மாநகர போலீசில் இன்ஸ்பெக்டர்கள் 'டிரான்ஸ்பர்'
11-Oct-2024
ஓசூர்: சேலம், பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்-டராக பணியாற்றி வந்தவர் முத்தமிழ் செல்வ-ராசன். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்-டுள்ளார். அவர் நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த பிரகாஷ், கிருஷ்ணகிரி மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்தி-கிரி, சிப்காட் ஆகிய, 2 ஸ்டேஷன்களின் பொறுப்-பையும், இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் கவனிப்பார். இவர், கடந்த சில ஆண்டுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
11-Oct-2024