உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு

ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர், காளேகுண்டா ஆகிய பகுதிகளில், மாந-கர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பொது-மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.மக்களின் குறைகளை கேட்டறிந்த மேயர் மற்றும் கமிஷனர், அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர். மாநகர நல அலுவலர் அஜிதா, மண்டல தலைவர் ரவி, கவுன்-சிலர் ஷில்பா சிவக்குமார், தி.மு.க., பகுதி செயலாளர் ராமு, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை