உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மேயர் உத்தரவு

மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மேயர் உத்தரவு

ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட மத்தம் சாலையில் உள்ள பூங்கா மற்றும் மயானத்தில், மாநகர மேயர் சத்யா நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பூங்காவில் மழைநீர் வடி கால் அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும். சுவர்களுக்கு வர்ணம் பூச வேண்டும் என, மாநகராட்சி பொறியாளர் விக்டரை அறிவுறுத்தினார். மேலும், மயானத்தை சுற்றி காம்பவுண்ட் அமைக்க உத்தரவிட்டார். கவுன்சிலர் தேவி மாதேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ