மேலும் செய்திகள்
மழை பாதிப்பு கணக்கெடுப்பு நடத்த தனிக்குழு
04-Dec-2024
ஊத்தங்கரைஊத்தங்கரை அடுத்த, கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி வளா-கத்தில், 5 கிராமங்களில் கனமழையால் பாதித்த, 125 குடும்பத்தி-னருக்கு அமைச்சர் சக்கரபாணி ஆறுதல் கூறி, அரிசி, பருப்பு, காய்-கறிகள், பாய், போர்வை, சேலை ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட அறங்கா-வலர் குழு தலைவர் ரஜினி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., நர-சிம்மன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன், ஒன்றிய குழு துணைத்த-லைவர் சத்தியவாணி செல்வம், தாசில்தார் திருமால், பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, தவமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.கல்லாவி பஞ்., துரைசாமி நகரை சேர்ந்த சென்னகேசவனின் குடிசை, மழையில் இடிந்து விட்டது. அதை பார்வையிட்ட அமைச்சர், அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 3.50 லட்சம் மதிப்பில் உடனடியாக வீடு கட்டி கொடுக்க, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதே பகு-தியில், கம்பங்களில் மின் கம்பிகள் தாழ்வாக இருப்பதை உடனடி-யாக சரிசெய்ய மின்வாரிய துறையினருக்கு அமைச்சர் உத்தர-விட்டார்.
04-Dec-2024