பஞ்., அலுவலக கட்டட பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கிருஷ்ணகிரி,: காவேரிப்பட்டணம் ஒன்றியம் எருமாம்பட்டி பஞ்.,ல், 29.70 லட்சம் ரூபாய் மதிப்பில் பஞ்., அலுவலகம் கட்டப்படுகிறது. பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன், பூமி பூஜை செய்து கட்டுமான பணியைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, தட்ரஅள்ளி பஞ்., ராமர்கொட்டாயில் மாநில நிதிக்குழு மானியமாக, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பின், கட்சி கொடி ஏற்றி வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தட்ர-அள்ளி பஞ்.,ல் துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி ராமர் கொட்டாய், சீகலஅள்ளி காலனி, தட்ரஹள்ளி கூட்ரோடு ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா, 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தட்ர-அள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.