கி.கிரி அரசு மருத்துவமனையில் நவீன ஆவின் பாலகம் திறப்பு
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி ஆவின் சார்பில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவின் பாலகத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் திறந்து வைத்து பேசுகையில், ''நவீன பாலகத்தில் பால்கோவா, தயிர், மோர், நறுமணம் கலந்த பால், குல்பி, அனைத்து வகையான ஐஸ் கிரீம்கள், ஆவின் மிச்சர், ஆவின் பட்டர் மில்க், பாதாம் பவுடர், நெய், மைசூர்பாக், ரசகுல்லா, குலோத்சாம், ஆவின் சாக்லெட், பிஸ்கேட் உள்ளிட்ட ஆவின் உபபொருட்கள் விற்பனை செய்யப்படும். எனவே மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஆவின் பால் மற்றும் உபபொருட்களை தங்கு தடையின்றி பெற்று பயன்பெறலாம்,'' என்றார்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சந்திரசேகர், ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு, துணைப்பதிவாளர் (பால்வளம்) கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.