உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் பூஞ்சை பிடித்த வெண்ணெய் பறிமுதல்

பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் பூஞ்சை பிடித்த வெண்ணெய் பறிமுதல்

ஓசூர்: ஓசூர் அடுத்த கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், ஏ.எம்.எஸ்., மில்க் புராடக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற முறையில், பால் உற்பத்தி பொருட்கள் மற்றும் நெய் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முத்து மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.அதில், சுகாதாரமற்ற டிரம்களில், 125 கிலோ அளவில் பூஞ்சை பிடித்த நிலையில் வெண்ணெய், பட்டர் கிரீம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை உடனடியாக அழித்தனர். மேலும் அங்கிருந்து, நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி, நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவையடுத்து, ஓசூர் சுற்றுவட்டாரத்தில் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்திய போதும், கிருஷ்ணகிரியில் நிறுவனங்களிலோ, ஓட்டல்களிலோ, ரோட்டோர கடைகளிலோ உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தவில்லை என்பதால், மாவட்ட நிர்வாகம் விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை