உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கட்டடத்தில் அருங்காட்சியகம் அரிய பொருட்கள் பாதுகாப்பின்றி உள்ள அவலம்

ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கட்டடத்தில் அருங்காட்சியகம் அரிய பொருட்கள் பாதுகாப்பின்றி உள்ள அவலம்

கிருஷ்ணகிரி, ஜன. 3-கிருஷ்ணகிரி, காந்திசாலையில் கடந்த, 1993ல், மாவட்ட அரசு அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இங்கு உயிரியல், தாவரவியல், மண்ணியல், தொல்லியல், சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வரலாற்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' போட்ட வாடகை கட்டடத்தில் பாதுகாப்பின்றி செயல்பட்டு வருகிறது.நடுகற்கள், கற்கால கருவிகள்இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட நடுகற்கள் பல்வேறு கலாசார முறைகளை உணர்த்தும் விதமாக உள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி அகரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, ஏறு தழுவுதல் நடுகல்லை அடிப்படையாக வைத்தே, மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல செல்லகுட்டப்பட்டி கிராமத்திலும், ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பழைய கற்காலம் தொடங்கி, புதிய கற்காலம், பெருங்கற்படை காலம் மற்றும் வரலாற்று காலம் வரையிலும், புஜ்ஜகொண்டபுதுார் மற்றும் ஓசூரில் இருந்து கி.பி.,18ம் நுாற்றாண்டை சேர்ந்த இரண்டு பீரங்கிகள் கொண்டு வந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிச்சுவா கத்தி, உறையுடன் கத்தி, பீரங்கி கற்குண்டுகள், மருந்து துப்பாக்கி ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்று சின்னங்கள் காக்கப்படுமாகிருஷ்ணகிரி மாவட்டத்தின் பண்டைய வாழ்க்கை முறை, கலாசாரத்தை விளக்கும் பொருட்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அருகிலோ அல்லது நகரின் முக்கிய இடத்திலோ, அரசு அருங்காட்சியத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்பது அதிகாரிகள், ஊழியர்கள் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறு தனியாக கட்டடம் கட்டினால், அருங்காட்சியக பொருட்களை நவீன முறையின் காட்சிப்படுத்தப்படுவதுடன், 500க்கும் மேற்பட்டோர் நின்று பார்க்கும் வகையில் அரங்குகள் அமைக்க முடியும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின், சுற்றலா தலமாக உள்ள அணைப்பகுதியில் அருங்காட்சியகம் அமைந்தால், வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்படுவதோடு, மாவட்டத்தின் பண்டைய வரலாற்று சுவடுகளை அனைவரும் தெரிந்து கொள்ளவும் முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ