உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த எம்.ஜி.ஆர்., நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், மேளதாளம், பம்பை முழங்க பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்கள், எலுமிச்சை கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை