என் ஓட்டு விற்பனைக்கல்ல தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு
கிருஷ்ணகிரி: 'என் ஓட்டு விற்பனைக்கல்ல' என்ற தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு, அரசு மகளிர் கலைக்-கல்லுாரியில் நடந்தது.கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம், தேர்தல் ஆணையம், ஜே.சி.ஐ., இணைந்து, தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.இதில், 'என் ஓட்டு விற்பனைக்கல்ல' என்ற தலைப்பில், சென்னை அறப்போர் இயக்கம் ராதா-கிருஷ்ணன் பேசினார். மாணவியருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். அதில், 'உங்கள் ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணம், மக்களிடமிருந்து, அரசியல்வாதிகள் திரு-டிய பணம். அதை பெற்றுக்கொண்டு திருட்டில் கூட்டாளி ஆக போகிறீர்களா. பணம் கொடுப்ப-வர்கள் நிறுத்தட்டும், நான் நிறுத்துகிறேன்.நான் வாங்கவில்லை என்றால், என் பணத்தை வேறு யாராவது வாங்கி விடுவார்கள் போன்ற ஏதோ ஒரு சாக்கை சொல்லி, இந்த திருட்டில் நீங்களும் பங்கு கொள்ள போகிறீர்களா. ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, உங்கள் சுயமரியா-தையை இழக்கப் போகிறீர்களா' என, விழிப்பு-ணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், விலாச மாற்றம் போன்-றவற்றிற்கான, விண்ணப்பங்கள் வழங்கப்பட்-டன. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த கையெ-ழுத்து இயக்க பேனரில், மாணவியர் கையெழுத்-திட்டனர்.