உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்துார் பிளாட்பார கடைகளில் மர்ம நபர்கள் அடாவடி வசூல்

மத்துார் பிளாட்பார கடைகளில் மர்ம நபர்கள் அடாவடி வசூல்

போச்சம்பள்ளி :கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், திருப்பத்துார்- - தர்மபுரி மாநில நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை 77, ஒன்றிணைந்து மத்துார் பஸ் ஸ்டாண்ட் வழியாக, மத்துார் ஏரிக்கரையின் மீது செல்கிறது. பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஏரிக்கரையின் மீது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், 50க்கும் மேற்பட்ட பிளாட் பார்ம் மற்றும் தள்ளுவண்டி கடைகளை வசதியற்ற ஏழைகள் அன்றாட வயிற்று பிழைப்பிற்கு வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களை, மத்துாரிள்ள ஒரு சிலர் மிரட்டி, 5,000 முதல், 20,000 ரூபாய் வரை முன்தொகை பெற்றுக்கொண்டு மாத வாடகையாக, 2,000 முதல், 5,000 ரூபாய் வரை அடாவடி வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் அன்றாட வயிற்று பிழைப்பிற்கு தொழில் செய்யும் கடைக்காரர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடாவடி வசூல் செய்யும் நபர்களை இனம் கண்டு, அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுகுறித்து, ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், '' விடுமுறையிலுள்ள மத்துார் இன்ஸ்பெக்டர், பணிக்கு வந்தவுடன், பிளாட்பார கடைக்காரர்களிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணனிடம் கேட்டதற்கு, ''ஆக்கிரமிப்பு மற்றும் அடாவடி வசூல் குறித்து, தனக்கு எந்த புகாரும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை