உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அறிஞர் அண்ணா கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

அறிஞர் அண்ணா கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது. கல்லுாரி அகத்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தேசிய மாணவர் படை உள்ள முதன்மை கல்லுாரியாக அறிஞர் அண்ணா கல்லுாரி உள்ளது. என்.சி.சி., மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தவும், சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்துவதே, இதன் குறிக்கோள். சமூக முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்,'' என்றார். விழாவில், சேலம் - 11 என்.சி.சி.,யின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சூரஜ் நாயர், என்.சி.சி., கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படையை துவக்கி வைத்து பேசுகையில், ''என்.சி.சி., மாணவர்கள், அதிக நுால்களை வாசிக்க வேண்டும். ஒருமைப்பாட்டு உணர்வுகளையும், பன்மொழி அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். இதன் மூலம் முப்படைகளில் வேலைவாய்ப்பை பெறலாம்,'' என்றார். இதில், சேலம் - 11 என்.சி.சி., இணை கமாண்டிங் அதிகாரி ரிசால்தார் ரத்தீஷ், கல்லுாரி கல்விப்புலம் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உள்பட பலர் பங்கேற்றனர். என்.சி.சி., பொறுப்பு அதிகாரி பிரேமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை