உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜன., 24ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில், தனியார் கல்லுாரி மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் இப்பேரணியை துவக்கி வைத்தார். பேரணி, டி.பி., சாலை வழியாக சென்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறைவடைந்தது. இதில், பெண் குழந்தைகளை பாது-காப்போம், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி, 500க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரி மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை