தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 15வது தேசிய வாக்-காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார்.மயிலாட்டம், சிலம்பாட்டம், நாடக கலைஞர்கள், தாரை தப்-பட்டை, இசைக்கருவிகள் முழங்க கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, பெங்களூரு ரோடு அரசு உதவி பெறும் பள்ளியில் நிறைவடைந்தது. பள்ளியில் நடந்த நிகழ்ச்-சியில் உறுதிமொழியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கும் பரிசுத்தொகை, சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சரயு வழங்-கினார்.* போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன் விழிப்புணர்வு பேரணி துவங்கியது. இதில் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, துணை தாசில்தார் விஜயன், வட்ட வழங்கல் அலுவலர் ரஹமத்-துல்லா மற்றும் வருவாய்த்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.* ஓசூரில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை, சப்க-லெக்டர் பிரியங்கா கொடியசைத்து துவக்கி வைத்தார். கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர் சான்றிதழ்களை வழங்கி, அங்கிருந்த போர்டில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, முதல் ஆளாக கையெழுத்திட்டார். * ஊத்தங்கரையில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ஊத்தங்-கரை தாசில்தார் திருமால் தலைமையில் நடந்தது. இதில் தேர்தல் துணை தாசில்தார் சக்தி, துணை தாசில்தார் அரவிந்தன், இன்ஸ்-பெக்டர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மருத்துவ-மனை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். அதே-போல கிருஷ்ணகிரி நகரிலுள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மது, உதவி உள்ளி-ருப்பு மருத்துவ அலுவலர் கிருபாவதி ஆகியோர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.