உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி, நவ. 5-திருச்சியில், செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மெர்சில்லா தலைமை வகித்தார்.துணைச்செயலாளர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மீன்துறை ஊழியர் சங்கம் நந்தகுமார், அனைத்து மருந்தாளுனர் சங்கம் பெருமாள், அரசு ஊழியர் சங்க, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், திருச்சி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு பணியிலுள்ள செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை