உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஓசூர், ராஜாஜி லே அவுட், கோவிந்த அக்ரஹாரத்தில், ஷைன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனம், 'ஷைன் ஸ்டார் பார்மா' என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதை, ஓசூர் மதகொண்டப்பள்ளியை சேர்ந்த அப்துல் மாலிக், 38 என்பவர் நடத்தி வருகிறார். இதில், அனுமதியில்லாத பல மருந்துகளை, இவர்கள் தயார் செய்து கொடுப்பதாக, மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு சென்ற புகார் படி, நேற்று தர்மபுரி மண்டல மருந்து கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர் ராம் தலைமையில், சென்னை மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சக்திவேல், ஓசூர், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். இதில், அந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 12,000 லேபிள்கள் மற்றும் 15 மாதிரி பாட்டில்களை சேகரித்து சென்றனர். மேலும், 'இவை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு, தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை