உரிமமின்றி பட்டாசுகள் வைத்திருந்த முதியவர் கைது
உரிமமின்றி பட்டாசுகள்வைத்திருந்த முதியவர் கைதுகிருஷ்ணகிரி, அக். 22-கிருஷ்ணகிரி டவுன் சீனிவாசா காலனியில் ஒரு வீட்டில், உரிமம் பெறாமல் பட்டாசு பெட்டிகள் வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் அங்கு, 9 பண்டல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அனுமதியின்றி வெடி வைத்திருந்த ஜான்பாஷா, 65 என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.அதேபோல பழைய சப்ஜெயில் சாலையில் ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு உரிமம் பெறாமல், 100 நாட்டு வெடிகளும், பட்டாசு கிப்ட் பாக்சுகளும் வைக்கப்பட்டிருந்தன.. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இனாயதுல்லா, சுல்தானா, நசீர், சரவணன் ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.