மேலும் செய்திகள்
எச்சரிக்கை பலகையால் வாகன ஓட்டிகள் நிம்மதி
24-Jul-2025
போச்சம்பள்ளி, கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற, தனியார் ஆம்னி பஸ், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி காப்புக்காட்டில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வந்த பயணிகள் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதேபகுதியில் கடந்த, 2 மாதங்களுக்கு முன் ஓசூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற டூரிஸ்ட் வாகனம் கவிழ்ந்து, 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ச்சியாக இதே பகுதியில், அடிக்கடி விபத்து நடப்பதால் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து, வேகத்தடை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Jul-2025