உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் பெருமாளுக்கு பஞ்ச கருட சேவை

ஓசூரில் பெருமாளுக்கு பஞ்ச கருட சேவை

ஓசூர்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்ப்ராஸ் ஓசூர் கிளை சார்பில், ஓசூர் சிஸ்யா பள்ளி வளாகத்தில், உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டி, 2ம் ஆண்டு பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓசூர் நேதாஜி ரோடு கோதண்டராம சுவாமி, பாத்தக்கோட்டா சீதா ராம ஆஞ்சநேயர் சுவாமி, ஓசூர் ஏரித்தெரு ருக்மணி சத்ய-பாமா சமேத வேணுகோபால சுவாமி, அகரம் சுயம்பு அபய ஹஸ்த லட்சுமி நரசிம்மர் சுவாமி, மோர்னப்பள்ளி அபய ஹஸ்த நரசிம்மர் சுவாமி ஆகிய, 5 உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் அர்ச்சனை செய்து, 5 சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தனர்.முன்னதாக உற்சவமூர்த்தி சுவாமிகளை அரங்கிற்குள் அழைத்து வருவதற்கு முன்பு, வானில் கருடன் வட்டமிட்டது. 5 கோவில்களின் உற்சவ மூர்த்திகளுக்கும், சிறப்பு சாத்துமறை, வேதபாராயணம் மற்றும் மகா சங்கல்பங்கள் நிறைவேற்றப்-பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பக்தர்களுக்கு துளசி பிரசாதங்கள் வழங்கி, சடாரி சேவையும் வழங்கப்பட்டன. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கர்நாடக சங்கீதம், பஜனை கீர்த்-தனைகள், கோலாட்டம் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், துணை மேயர் ஆனந்-தய்யா, காங்., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன், நிர்வாகி சூர்யகணேஷ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை, தமிழ்நாடு பிராமணர் சங்க ஓசூர் கிளை தலைவர் நாகராஜன், மகளிர் அணி தலைவி ரோகிணி, நிர்வாகிகள் கணேஷ், சாமிநாதன், குமார், ராமன் உட்பட பலர் செய்திருந்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ