மேலும் செய்திகள்
சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் உத்தரவால் ஜரூர்
01-Nov-2025
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, வலசகவுண்டனுார் பஞ்.,க்கு உட்பட்ட, கூச்சானுார் மோட்டூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மண் சாலையை, சிமென்ட் சாலையாக அமைக்க கடந்த அக்., 27ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தன் பட்டா நிலத்தில் வழி உள்ளதாகவும், அதில், சாலை அமைக்கக்கூடாது எனவும், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறி, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். அதை கண்டித்து, கூச்சானுார் மோட்டூர் கிராம மக்கள் அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணையில், சம்மந்தப்பட்ட இடம், அரசு புறம்போக்கு நிலம் என்பதால், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. பணியை நிறைவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால், நேற்று கூச்சானுார் மோட்டூர் கிராம மக்கள், மாணவ, மாணவியர் என, 200க்கும் மேற்பட்டோர், போச்சம்பள்ளி, சந்துார் வழியாக, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், கூச்சானுார் பகுதியில் நேற்று காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போச்சம்பள்ளி தாசில்தார் அருள், பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் ஆகியோர், 2 நாட்களில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை முடித்து தருவதாக, உறுதியளித்ததை அடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
01-Nov-2025