மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
19-Nov-2024
கிருஷ்ணகிரி, நவ. 27-தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது அடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், பஞ்., செயலாளர்கள், வனக்காப்பாளர்கள், பட்டுவளர்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டில் குறைபாடுகளை களைய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, ஓய்வூதியர்களின் நிலை குறித்து அறிய டிரேக்கிங் சிஸ்டம் நடைமுறை படுத்த வேண்டும். ஓய்வூதியம் பிடித்தம் காலத்தை, 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நிர்வாகிகள், சரவணபவன், முருகன், ஸ்ரீனிவாசலு, ரங்கநாதன், ரங்கநாதன், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு குணசேகரன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
19-Nov-2024