உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு முடக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கடும் அவதி

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு முடக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கடும் அவதி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு முடங்கி உள்ளதால், பொது-மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (சி.ஆர்.எஸ்) என்ற, 'போர்டல்' மூலமாக, டிஜிட்டல் முறையில் பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்படுகிறது. டிஜிட்டல் பிறப்பு சான்-றிதழ்கள் பள்ளி சேர்க்கை, அரசு வேலைகள், திருமணப்பதிவு, ஆதார் கார்ட் உட்பட பல்வேறு சேவைகளுக்கு மிகவும் முக்கிய தேவையாகும். அதனால், குழந்தை பிறந்தவுடன், அதன் பிறப்பை அதன் பெற்றோர் பதிவு செய்கின்றனர். அதேபோல், இறப்பும் பதிவு செய்யப்படுகிறது.மாவட்டத்தில் சி.ஆர்.எஸ்., போர்டல் மிகவும் மெதுவாக உள்-ளதால், போர்டலை, 'அப்டேட்' செய்யும் பணி கடந்த, 10 நாட்க-ளுக்கும் மேலாக நடக்கிறது. இதனால், பிறப்பு, இறப்பு சான்-றிதழ் பதிவு பணி முடங்கி உள்ளது.ஓசூர் மாநகராட்சியில் தினமும், 15க்கும் மேற்பட்ட பதிவு நடந்த நிலையில், சி.ஆர்.எஸ்., போர்டல், 'அப்டேட்' என, 10 நாட்களுக்கும் மேலாக பதிவு முடங்கி உள்ளதால், மக்கள் அவ-திப்படுகின்றனர். சி.ஆர்.எஸ்., போர்டல், 'அப்டேட்' காரணமாக, சரியான நேரத்திற்கு ஓ.டி.பி., வருவதில்லை. இதனால், மாவட்டத்-திலுள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, அரசு மருத்து-வமனைகள் உட்பட அனைத்து பதிவு அலகுகளிலும், சான்றிதழ் பதிவு முடக்கியுள்ளது. இது, பிறப்பு, இறப்பு பதிவு செய்பவர்கள், பொதுமக்கள் கோபத்திற்கு ஆளாகும் நிலையை உருவாக்கி உள்-ளது.இது குறித்து, சுகாதார பணிகள் அலுவலகத்தில் விசாரித்த-போது, 'தமிழகம் முழுவதும் சி.ஆர்.எஸ்., போர்டல், 'அப்டேட்' செய்யும் பணி நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக இப்பிரச்னை உள்-ளது. இன்னும் ஓரிரு நாட்களில், 'அப்டேட்' பணி முடிந்து விடும். அதன் பின் பிரச்னையின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை