டாடா எலக்ட்ரானிக்ஸ் விரிவாக்கத்துக்கு அனுமதி
ஓசூர்: 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், ஓசூரில் உள்ள தொழிற்சா-லையை, 3,699 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்வ-தற்கு, தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்-சூழல் அனுமதி வழங்கியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கான பாகங்கள் தயாரா-கின்றன. இதற்காக, 3,051 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்-ளது. இதனால், 20,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது.தற்போது, ஓசூர் ஆலையை, 3,699 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்-ளது. அதன்படி, 1.49 லட்சம் சதுர மீட்டரில் செயல்பட்டு வரும் ஆலை, 5 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட உள்-ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததையடுத்து, விரைவில் விரிவாக்க ஆலைக்கான கட்டுமானப் பணிகளை டாடா நிறுவ-னம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.