உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டுமனை பட்டா கோரி மனு

வீட்டுமனை பட்டா கோரி மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மூக்கண்டப்பள்ளி அடுத்த கொத்துார் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேல், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகளை போட்டு வசிக்கிறோம். எங்களுக்கு வேறு எந்த இடத்திலும் நிலமோ, வீடுகளோ இல்லை. எங்கள் பகுதியில் குடியிருந்து வரும் ஒரு சிலருக்கு, வீட்டு இலவச மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், மீதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்காமல் உள்ளனர். எனவே, 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எங்களுக்கு, இலவச பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை