உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழாய் வால்வு சரிசெய்து குடிநீர் வினியோகம்

குழாய் வால்வு சரிசெய்து குடிநீர் வினியோகம்

ஓசூர்: ஓசூர் அருகே பாகலுார், பேரிகை, அத்திமுகம், கும்பளம் சுற்றுப்புற கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், ஓசூரில் இருந்து சாலையோரம் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பாகலுார் சாலையிலுள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் வால்வு உள்ளது. இந்த வால்வு பழுதால் நேற்று முன்தினம் மதியம் பல அடி உயரத்திற்கு மேல் ஒகேனக்கல் குடிநீர் பீய்ச்சி அடித்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி பாகலுார் சாலையில் ஓடியது. இது தொடர்பான செய்தி, படம், 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், குழாய் வால்வு பழுது சரி செய்யப்பட்டு, பாகலுார், பேரிகை, அத்திமுகம், கும்பளம் கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை