பையூர் தோட்டக்கலைக்கல்லுாரி டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு
பையூர் தோட்டக்கலைக்கல்லுாரிடிஜிட்டல் பயிர் கணக்கெடுப்புகிருஷ்ணகிரி, நவ. 21-கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் துறை சார்பில், டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கடந்த, 8 முதல், 16 வரை நடந்தது. பையூர் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவ, மாணவிகளுடன் இணைந்து, வேளாண் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் இணைந்து, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு திட்டத்தை, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள, 382 கிராமங்களில் நடத்தி முடித்துள்ளது. இது குறித்து தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அனீசாராணி கூறியதாவது: பையூர் வேளாண் கல்லுாரியில் இருந்து, 141 மாணவர்களும், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோவையில் இருந்து, 236 மாணவர்களும் இணைந்து, டிஜிட்டல் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டனர். இவர்கள், 7.77 லட்சம் சர்வே எண்ணை கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை தாலுகாவில் கணக்கெடுத்துள்ளனர். இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு மூலம், விவசாயிகளின் நில உடைமை தொடர்பான விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்றவற்றை, பல்வேறு துறைகளுக்கும் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் தனித்தனியே வழங்க வேண்டிய நிலை மாறும்.தற்போது, அனைத்து நில விபரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விபரங்கள், கணக்கீடு புவியியல் வரைபடம் அனைத்தையும் இணைத்து, மின்னணு முறையில் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கும் திட்டமாக இவை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.