மேலும் செய்திகள்
ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது
22-Oct-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவிலுக்கு சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத நிலங்களில், மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், ''கோவிலுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50,000மரக்கன்றுகள் நட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது,'' என்றார்.தொடர்ந்து, பர்கூர் ஒன்றியம், பாலேப்பள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். மல்லப்பாடி இருளர் காலனி, ஜெகதேவி அரசு சுகாதார நிலையம், ஜெகதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
22-Oct-2025