உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொக்லைன் வாகனம்; டிப்பர் லாரி பறிமுதல்

பொக்லைன் வாகனம்; டிப்பர் லாரி பறிமுதல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறையினர், அந்தி வாடி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, மத்திகிரியில் இருந்து, 5 யூனிட் ஜல்லியை கர்நாடகாவிற்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.அதேபோல், ஓசூர் வருவாய் ஆய்வாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள், உளியாளம் ஏரியில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் அள்ளிய, பொக்லைன் வாகனம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !