ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ஓட்டுச்சாவடி முகவர்கள்ஆலோசனை கூட்டம்ஊத்தங்கரை, நவ. 16கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.அ.தி.மு.க., மத்திய ஒன்றிய செயலர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் பங்கேற்று, மத்திய ஒன்றியத்தில் உள்ள 11 பஞ்.,களில் உள்ள, 54 ஓட்டுச்சாவடி முகவர்கள் இன்றும், நாளையும் (17ம் தேதி) நடைபெறும் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும் என்று முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.மாவட்ட துணை செயலர் சாகுல் அமீது, முன்னாள் ஒன்றிய செயலர் தேவேந்திரன், நகர செயலர் சிக்னல் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார் நன்றி கூறினார். அதேபோல் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஆண்டியூர் கிராமத்தில் வேடி தலைமையிலும், தெற்கு ஒன்றியத்தின் சார்பில் வேங்கன் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது.