உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்ராவன இரண்டாவது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பூஜை

ஸ்ராவன இரண்டாவது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பூஜை

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். தமிழ் மாத புரட்டாசி போலவே, தெலுங்கு, கன்னட மக்கள் ஸ்ராவன மாதங்களில் அசைவம் சாப்பிடாமல், அம்மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது ஸ்ராவன சனிக்கிழமையான நேற்று, பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.சூளகிரி அடுத்த கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபி ேஷகம் செய்யப்பட்டது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்கள், கருட கம்பத்தின் முன் தேங்காய் உடைத்து வழிபட்டனர். பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோவிலில் காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை