உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்

பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்

கிருஷ்ணகிரி, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ராஜி, 20. இவர் வேப்பனஹள்ளி அருகே, அலேகுந்தாணியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த, 30ல், இவர் வேலை செய்து கொண்டிருந்த போது, இயந்திரத்தின் பெல்ட் ஒன்று அறுந்து ராஜி மீது விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை