உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் பள்ளி பஸ் டிரைவர் டிராக்டர் மோதி உயிரிழப்பு

தனியார் பள்ளி பஸ் டிரைவர் டிராக்டர் மோதி உயிரிழப்பு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, வடமலம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம், 52. தனியார் பள்ளி பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கொடமாண்டப்பட்டியில் பஸ்சை நிறுத்தி விட்டு, தன் வீட்டிற்கு பல்சர் பைக்கில் போச்சம்பள்ளி, பாளேதோட்டம் ரோடில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்து பலியானார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ